×

மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டர் வாகன விழிப்புணர்வு பேரணி; நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் வங்கி கணக்கில் வரவுவைப்பு

பெரம்பலூர், ஏப்.14: நடைபெறவுள்ள பாராளு மன்றப் பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங் களில் பணியாற்றவுள்ள அலுவலர்களுக்கான மூன்றாம் கட்ட பயிற்சி வகுப்பினை- பெரம்பலூர் பராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்டக் கலெக்டருமான கற்பகம் நேற்று (13ஆம் தேதி) பெரம்பலூர் வெங்கடேசபுரத்திலுள்ள கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வருகிற 19ஆம்தேதி அன்று நடைபெறவுள்ள 18ஆவது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள 147. பெரம்பலூர்(தனி), 148. குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் வாக்குப் பதிவு நாளன்று வாக்குச் சாவடி மையங்களில் பணி யாற்றவுள்ள வாக்குப்பதிவு அலுவலர்கள், வாக்குச் சாவடி நிலை அலுவலர்க ளுக்கு மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களை எவ்வாறு பாதுகாப்பாக கையாளுவது, வாக்குச் சாவடி மையங்களில் என் னென்ன பணிகளை மேற் கொள்ள வேண்டும் என்பது குறித்த விரிவான பயிற்சி கள் வழங்கப்பட்டு வருகிறது.

பெரம்பலூர் சட்டமன்றத் தொகுதிக்கு பெரம்பலூர் வெங்கடேசபுரத்திலுள்ள கோல்டன்கேட்ஸ் பள்ளியி லும், குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு மேலமாத்தூர் ராஜவிக்னேஷ் மேல்நிலை பள்ளியிலும் பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது. முதல் பயிற்சி வகுப்பு கடந்த மார்ச்- 24ஆம் தேதியன்றும், இரண்டாம் கட்ட பயிற்சிவகுப்பு ஏப்ரல் 7ஆம் தேதியன்றும் நடைபெற் றது. இதனைத் தொடர்ந்து நேற்று(13ம் தேதி,) மூன் றாம் கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது. பெரம்பலூர் கோல்டன் கேட்ஸ் மெட்ரிக் பள்ளியில் நேற்று நடை பெற்ற மூன்றாம்கட்ட பயிற்சி வகுப்பினை பெரம் பலூர் பராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான கற்பகம் நேரில் பார்வை யிட்டு ஆய்வு செய்தார்.

இந்த பயிற்சி வகுப்பில் பங்கேற்றவர்களிடம் மாவட்ட கலெக்டர் தெரிவித்ததாவது :
வருகிற 19ம்தேதி நடைபெறவுள்ள 18வது பாராளுமன்றப் பொதுத் தேர்தலில் உங்கள் ஒவ் வொருவரின் பங்கு இன்றி யமையாதது. ஜனநாயக திருவிழாவில் நாமும் பங்கேற்கின்றோம் என்ற முக்கியத்துவத்தை நீங்கள் உணர வேண்டும். பயிற்சி வகுப்புகளில் உங்களுக்கு வழங்கப்படும் தகவல் களை முழுமையாக அறிந்து, நல்லமுறையில் செயல்படுத்த வேண்டும். மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாது காப்பாக கையாளவேண் டும்.வாக்குப்பதிவு நாளன்று மிகுந்த கவனத் துடன் பணியாற்ற வேண் டும் எனத்தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து, பயிற்சிக்கு வந்த அலுவலர்கள் தங்கள் தபால்வாக்குகளை செலுத்துவதற்கு அமைக் கப்பட்டுள்ள வாக்கு செலுத்தும் மையத்தினையும் மாவட்ட கலெக்டர் பார்வை யிட்டார்.

இந்த ஆய்வின் போது பெரம்பலூர் சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலரான சப் கலெக்டர் கோகுல், மாவட்ட கலெக்டர் அலுவலக மேலா ளர் சிவா, சப் கலெக்டரின் நேர்முக உதவியாளர் கிரு ஷ்ணராஜ், வட்டாட்சியர்கள் சரவணன் (பெரம்பலூர்), சத்தியமூர்த்தி (ஆலத்தூர்), மாயகிருஷ்ணன்(வேப்பந்தட்டை) மற்றும் பலர் உடனி ருந்தனர்.

The post மாற்றுத்திறனாளிகள் ஸ்கூட்டர் வாகன விழிப்புணர்வு பேரணி; நாடாளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபடும் வங்கி கணக்கில் வரவுவைப்பு appeared first on Dinakaran.

Tags : Disabled People's Scooter Vehicle Awareness Rally ,Perambalur ,Parliamentary Constituency ,Electoral Officer ,District Collector ,Karpagam ,Golden ,Perambalur Venkatesapuram ,Vehicle Awareness Rally ,Dinakaran ,
× RELATED பெரம்பலூர் நாடாளுமன்ற தொகுதி...