×

தேர்தல் விதியை மதிக்கிறதே இல்ல… அண்ணாமலை மீது நடவடிக்கை எடுங்க.. ஆணையத்தில் முத்தரசன் புகார்

சென்னை: தேர்தல் நடத்தை விதிகளை மீறிய பாஜ வேட்பாளர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன், தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ளார்.

இது தொடர்பாக முத்தரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:
கோவை தொகுதியில் பாஜ தலைவர் அண்ணாமலை போட்டியிடுகிறார். இவர் தேர்தல் நடத்தை விதிகளை முற்றிலும் நிராகரித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 10 மணிக்கு மேல் ஆவாரம்பாளையம் பகுதியில் ஒலிபெருக்கியில் வாக்கு சேகரித்துள்ளார். பாதுகாப்பு பணிக்கு சென்ற காவலர்கள் மவுன சாட்சியாக கடந்து சென்றுள்ளனர்.

தேர்தல் நடத்தை விதிகளை மதிக்காமல் தொடர்ந்து மீறி செயல்பட்டு வரும் அண்ணாமலையின் அத்துமீறல் மீது தேர்தல் ஆணையம் உடனடியாக தலையிட்டு சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டும்.

The post தேர்தல் விதியை மதிக்கிறதே இல்ல… அண்ணாமலை மீது நடவடிக்கை எடுங்க.. ஆணையத்தில் முத்தரசன் புகார் appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Muttarasan ,Chennai ,Secretary of State ,Election Commission ,Baja ,Mutharasan ,Govai ,Dinakaran ,
× RELATED பாஜக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் தொடங்கியது