×

அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்; ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை தருவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: இனிப்பு வழங்கிய ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை தருவோம். கோவையில் நேற்று ராகுல் இனிப்பு வழங்கிய வீடியோவை பகிர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் X-தளத்தில் பதிவு செய்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக காங். மூத்த தலைவர் ராகுல் காந்தி ஸ்வீட் வாங்கிச் சென்ற வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது.

மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், நாடு முழுவதும் பல்வேறு அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றன. கட்சிகளின் தேசிய தலைவர்கள், மூத்த தலைவர்கள், பல்வேறு மாநிலங்களில் தங்களது கட்சி சார்பிலும், கூட்டணி சார்பிலும் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் கோவை செட்டிபாளையத்தில் INDIA கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் INDIA கூட்டணி தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் காங். மூத்த தலைவர் ராகுல் காந்தியும் கலந்து கொண்டார். பொதுக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ராகுல் காந்தி, வரும் வழியில் சிங்காநல்லூர் பகுதியில் உள்ள ஸ்வீட் கடை ஒன்றில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்காக ஸ்வீட்ஸ் வாங்கினார். சாலையில் இருந்த தடுப்புச் சுவரை தாண்டி குதித்து கடைக்குச் சென்ற அவரை, ஸ்வீட் கடை உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் கைகுலுக்கி வரவேற்றனர்.

பொதுக்கூட்டத்திற்கு வந்த ராகுல் காந்தியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கைகுலுக்கி, கட்டியணைத்து வரவேற்றார். அப்போது, தான் வாங்கி வந்த ஸ்வீட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ராகுல் காந்தி கொடுத்தார். அதை மகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெற்றுக் கொண்டார்.

இந்த நிலையில், ராகுல் காந்தி தனக்கு இனிப்பு வழங்கிய வீடியோவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர் பதிவிட்டுள்ளதாவது; “அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்! என்னுடைய சகோதரர் ராகுல் காந்தி இனிப்பு வழங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்திக்கு இந்தியா கூட்டணி இனிப்பான வெற்றியை கொடுக்கும்.” இவ்வாறு அவர் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

The post அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்; ராகுல் காந்திக்கு இனிப்பான வெற்றியை தருவோம்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,CM K. Stalin ,Chennai ,Chief Minister ,Rahul Sweet ,Goa ,K. Stalin ,Mu. K. Kong ,Stalin ,Dinakaran ,
× RELATED ராகுல் காந்தியை புகழ்ந்த பதிவை நீக்கினார் செல்லூர் ராஜு