×

நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்.17 முதல் 19 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை

 

திருச்சி, ஏப்.13: நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு வரும் ஏப்.17ம் தேதி முதல் ஏப்.19ம் தேதி வரை டாஸ்மாக் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் சேர்ந்து இயங்கும் பார்களுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்த செய்திக்குறிப்பில் கலெக்டர் பிரதீப் குமார் தெரிவித்துள்ளதாவது,

நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தல்-2024ஐ முன்னிட்டு திருச்சி மாவட்டத்திலுள்ள மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் மற்றும் அதனுடன் இணைந்து செயல்படும் மதுக்கூடங்கள் (பார்கள்), FL2 முதல் FL-11 பார்கள் (FL-6 நீங்கலாக) அனைத்து மதுபானக்கூடங்களுக்கும் வரும் ஏப்.17ம் தேதி காலை 10 மணி முதல் ஏப்.19 (வாக்குபதிவு நாள்) இரவு 12 மணி வரை விடுமுறை அளிக்கப்படுகிறது.

அதே போன்று வரும் ஏப்.21ம் தேதி மகாவீர் ஜெயந்தி மற்றும் மே.1ம் தேதி மே தினம் ஆகிய தினங்களிலும் மதுபானக்கடைகள் மற்றும் அவற்றுடன் இணைந்து செயல்படும் பார்கள் ஆகியவற்றுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே இந்த விடுமுறை தினங்களில் மதுபானங்களை விற்பனை செய்வதையும், வேறு இடங்களுக்கு கொண்டு செல்வதையும் தவிர்க்க வேண்டும். மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என திருச்சி மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் தொிவித்துள்ளார்.

The post நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு ஏப்.17 முதல் 19 வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை appeared first on Dinakaran.

Tags : Tasmac ,Trichy ,Pradeep ,Dinakaran ,
× RELATED திருச்சி மாவட்டத்தில் மாஜி...