×

அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் அனுசரிப்பு; உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி

 

திருச்சி, ஏப்.13: திருச்சி மாநகராட்சி அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்.14ஐ முன்னிட்டு சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல் 14ம் தேதியை ஆண்டுதோறும் சமத்துவ நாளாக அனுசரித்து ஊழியர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நாளை (ஏப்.14) அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாள் நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ளது.

எனவே திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்தில் அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு நேற்று சமத்துவநாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகராட்சி கமிஷனர் சரவணன் தலைமை வகித்தார். தொடர்ந்து கமிஷனர் சரவணன் சமத்துவ நாள் உறுதிமொழியை வாசிக்க மாநகராட்சி அனைத்துத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் சமத்துவநாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

 

The post அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு மாநகராட்சி அலுவலகத்தில் சமத்துவ நாள் அனுசரிப்பு; உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி appeared first on Dinakaran.

Tags : Ambedkar ,Trichy ,Equality Day Pledge Taking ,Trichy Municipal Corporation ,Annal Ambedkar ,Dinakaran ,
× RELATED அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள்...