×

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா

 

ஊட்டி,ஏப்.13: நீலகிரி மாவட்ட தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கோத்தகிரியில்,இயக்க ஆண்டு விழாவும் , பணிநிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும்,அரசின் சிறப்பு விருது பெற்ற ஆசிரியர்களுக்கு பாராட்டு விழாவும் என முப்பெரும் விழா நடந்தது. விழாவிற்கு வட்டாரத் தலைவர் ஹேரி உத்தம்சிங் தலைமை தாங்கினார்.வட்டாரச் செயலாளர் ராஜேந்திரன் வரவேற்றார்.

இயக்கத்தின் மாநில பொதுச்செயலாளர் முத்துராமசாமி கலந்து கொண்டு பணி நிறைவு பெற்ற ஆசிரியர்களுக்கு பொன்னாடை அணிவித்து வாழ்த்தி பாராட்டி,நினைவுப் பரிசு வழங்கியும், சிறப்பு விருது பெற்ற ஆசிரியர்களை பாராட்டியும் உரையாற்றினார். இவ்விழாவில் நீலகிரி மாவட்டத் தலைவர் அண்ணாதுரை, மாவட்டப் பொருளாளர் முரளி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராஜ்குமார்,வசந்தகுமாரி, ஓய்வு பிரிவு மாவட்டத் தலைவர் நஞ்சன்,புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் சகோதரி மோட்சா மேரி,கோத்தகிரி மேனாள் பொறுப்பாளர் சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ஈரோடு விஜயகுமார்,அந்தியூர் வட்டாரச் செயலாளர் ஆனந்தகுமார்,மாவட்ட துணைத் தலைவர் சுந்தரம், மகுடேஷ்வரன்,சுரேஷ், நம்பியூர் வட்டாரத் தலைவர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

ஈரோடு மாவட்டத்திலிருந்து விழாவில் கலந்துக் கொண்ட அனைவருக்கும் கோத்தகிரி வட்டாரக்கிளையின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கி சிறப்பித்தனர்.நிறைவாக வட்டாரப் பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார். விழாவில் சுமார் 150 பேர் கலந்து கொண்டனர்.முன்னதாக இவ்வாண்டில் மறைந்த ஆசிரியர்கள் மற்றும் இயக்கத்தின் மாவட்டத் தலைவர் வேல்முருகன் தந்தை மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

The post தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் முப்பெரும் விழா appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Primary School Teachers Alliance Triennial Celebration ,Nilgiri District Tamil Nadu Primary School Teachers' Alliance ,Kothagiri ,Tamil Nadu Primary ,School ,Teachers ,Alliance ,Triennial Ceremony ,
× RELATED பஞ்சகவ்யா தயாரிப்பு பயிற்சி...