×

பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினம் நாடாளுமன்ற தொகுதி பாஜ வேட்பாளராக ரமேஷ்கோவிந்த் நேற்று முன்தினம் மாலை நாகப்பட்டினம் காடம்பாடி பகுதியில் பிரசாரம் செய்ய வந்தார். அப்போது நாகப்பட்டினம் நாகூர் சாலையில் வெடி வைத்து தொண்டர்கள் வரவேற்பு அளித்தனர். இதில் அந்த பகுதியில் இருந்த பக்கிரிசாமி, சுப்ரமணியன் ஆகியோரது வீட்டின் கூரை மீது வெடி துகள்கள் பட்டு வீடு தீப்பிடித்து எரிந்து நாசமானது.

இதுகுறித்த புகாரின்பேரில், பாஜ வேட்பாளர் ரமேஷ்கோவிந்த், பாஜ நிர்வாகி மணிவண்ணன் ஆகியோர் மீது 2 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும், தடை செய்யப்பட்ட வெடிபொருட்கள் விற்பனை செய்ததாக பட்டாசுக்கடைக்கும் சீல் வைக்கப்பட்டது. இந்த தீ விபத்தில் பக்கிரிசாமியின் வீட்டில் இருந்த 5 லட்சம் ரொக்க பணம், 8 பவுன் நகை மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் என ரூ.12 லட்சம் மதிப்பிலான பொருட்களும் சுப்ரமணியன் வீட்டில் இருந்த ரூ.4.50 லட்சம் மதிப்பிலான பொருட்களும் எரிந்து நாசமாகி உள்ளது.

The post பட்டாசு வெடித்ததில் 2 வீடுகள் நாசம்: பாஜ வேட்பாளர் மீது வழக்கு appeared first on Dinakaran.

Tags : BJP ,Nagapattinam ,Ramesh Kovind ,Gadambadi ,Nagapatnam ,Nagor road ,Pakirisamy ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் சாமந்தான்பேட்டையில்...