×

பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க உறுதியேற்போம்: திருமாவளவன் அறிக்கை

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வெளியிட்ட அறிக்கை: அம்பேத்கர் இயற்றித் தந்த அரசமைப்புச் சட்டத்தை ஒழிப்பதையே மோடி அரசு தனது இலக்காக வைத்துள்ளது. மீண்டும் பாஜ பாசிசக் கும்பல் ஆட்சிய திகாரத்துக்கு வந்து விட்டால் இந்தியாவில் நாடாளுமன்ற ஜனநாயக முறையே இருக்காது. எனவே, அவர்களது சதித்திட்டத்தை முறியடித்து இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்பதும், நாடாளுமன்ற சனநாயக முறையைப் பாதுகாப்பதும் நமது முதன்மையான கடமை. அம்பேத்கரின் பிறந்த நாளின் போது அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து நாட்டை மீட்போம், அரசமைப்புச் சட்டம் காப்போம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

The post பாசிச கும்பலிடமிருந்து நாட்டை மீட்க உறுதியேற்போம்: திருமாவளவன் அறிக்கை appeared first on Dinakaran.

Tags : Thirumavalavan ,CHENNAI ,Vichithu Siruthaigal Party ,Modi government ,Ambedkar ,BJP ,India ,
× RELATED சென்னையில் ம.நீ.ம. கட்சித் தலைவர்...