×

அரசியல் களத்தில் பொய்களை கூறுவதால் வரலாறு மாறிவிடாது; இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல்: ராகுல் காந்தி பதிவு

புதுடெல்லி: நாட்டை பிளவுபடுத்த நினைத்தவர்களுடன் கைகோர்த்தவர்கள் யார் என்பதற்கும், நாட்டின் சுதந்திரத்திற்காக போராடியவர்கள் யார் என்பதற்கும் வரலாறு சாட்சியாக உள்ளது என காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ‘எக்ஸ்’ தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது; இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல். ஒரு பக்கம் இந்தியாவை எப்போதும் ஒருங்கிணைத்த காங்கிரஸ் இருக்கிறது. இன்னொரு பக்கம் மக்களை பிரிக்க முயல்பவர்கள் இருக்கிறார்கள்.

நாட்டைப் பிளவுபடுத்த நினைத்த சக்திகளுடன் கைகோர்த்து அவர்களை பலப்படுத்தியவர்கள் யார் என்பதற்கும், நாட்டின் ஒற்றுமைக்காகவும், சுதந்திரத்திற்காகவும் போராடியவர்கள் யார் என்பதற்கும் வரலாறு சாட்சியாக உள்ளது. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது ஆங்கிலேயர்களுடன் நின்றவர்கள் யார்? இந்தியாவின் சிறைகள் காங்கிரஸ் தலைவர்களால் நிரப்பப்பட்டபோது, நாட்டைப் பிளவுபடுத்தும் சக்திகளுடன் சேர்ந்து மாநிலங்களில் ஆட்சியை நடத்தியது யார்? அரசியல் களத்தில் பொய்களை கூறுவதால் வரலாறு மாறிவிடாது. இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

The post அரசியல் களத்தில் பொய்களை கூறுவதால் வரலாறு மாறிவிடாது; இந்த தேர்தல் இரண்டு சித்தாந்தங்களுக்கு இடையிலான மோதல்: ராகுல் காந்தி பதிவு appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,New Delhi ,Congress ,Dinakaran ,
× RELATED மோடி ஆட்சியில் ரயிலில் பயணிப்பதே தண்டனையாகி விட்டது: ராகுல் தாக்கு