×

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பதியவுள்ள 17.48 லட்சம் வாக்காளர்கள்: புதிதாக 15.92 ஆயிரம் பேர் சேர்ப்பு

காஞ்சிபுரம், ஏப்.10: காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில், புதிதாக சேர்க்கப்பட்ட 15.92 ஆயிரம் வாக்காளர்கள் உள்ளிட்ட 17.48 லட்சம் பேர் தங்களது வாக்குகளை செலுத்தவுள்ளனர். காஞ்சிபுரம் நாடாளுமன்ற தனி தொகுதியில் திமுக, அதிமுக, பாமக, நாம் தமிழர் உள்ளிட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் என 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மேலும், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான 15 ஆயிரத்து 920 வாக்காளர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியின் வேட்பாளர்களாக 11 பேர் களத்தில் தீவிரவாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 5 அரசியல் கட்சியினரும், 6 சுயேட்சை வேட்பாளர்களும் அடங்குவர்.

காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட, திருப்போரூர், செய்யூர், செங்கல்பட்டு, மதுராந்தகம், காஞ்சிபுரம், உத்திரமேரூர் ஆகிய சட்டசபை தொகுதியில், கடந்த ஜன.22 வரை, 17 லட்சத்து, 32 ஆயிரத்து, 946 வாக்காளர்கள் இருந்தனர். இதையடுத்து, மார்ச் 17ம் தேதி வரை, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பதற்கான விண்ணப்பங்கள் பெறப்பட்டதில், புதிதாக காஞ்சிபுரத்தில் 1,835 பேர், உத்திரமேரூரில் 1,062 பேர், செங்கல்பட்டில் 6,620 பேர், திருப்போரூரில் 4,403 பேர், செய்யூரில் 860 பேர், மதுராந்தகத்தில் 1,140 பேர் என, மொத்தம் 15 ஆயிரத்து, 920 வாக்காளர்கள், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் சேர்ந்துள்ளனர். புதிதாக சேர்ந்த வாக்காளர்களின்படி, மொத்தம் 17 லட்சத்து, 48 ஆயிரத்து, 866 பேர், காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ளனர்.

தொகுதி ஆண்கள் பெண்கள் திருநங்கைகள் மொத்தம்
காஞ்சிபுரம் 1,50,660 1,61,272 27 3,11,959
உத்திரமேரூர் 1,28,528 1,38,443 41 2,67,012
செங்கல்பட்டு 2,07,015 2,14,652 62 4,21,729
திருப்போரூர் 1,48,266 1,53,614 55 3,01,935
செய்யூர் 1,08,903 1,12,588 25 2,21,516
மதுராந்தகம் 1,10,084 1,14,538 93 2,24,715
மொத்தம் 8,53,456 8,95,107 303 17,48,866

The post காஞ்சிபுரம் நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பதியவுள்ள 17.48 லட்சம் வாக்காளர்கள்: புதிதாக 15.92 ஆயிரம் பேர் சேர்ப்பு appeared first on Dinakaran.

Tags : Kanchipuram Parliamentary Elections ,Kanchipuram ,parliamentary ,DMK ,AIADMK ,BAM ,Naam Tamilar ,Parliamentary Constituency ,
× RELATED காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கான...