×

திகார் சிறையில் கவிதாவிடம் சிபிஐ விசாரணை

புதுடெல்லி: டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்கில் பி.ஆர்.எஸ். தலைவர் கவிதாவின் நீதிமன்ற காவல் ஏப்ரல் 23 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அவரிடம் திகார் சிறையில் சிபிஐ விசாரணை நடத்தியது. டெல்லி புதிய மதுபான கொள்கை வழக்குடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில் தெலங்கானா முன்னாள் முதல்வரின் மகளும், பாரதிய ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர்களில் ஒருவருமான கவிதா(46) கடந்த 15ம் தேதி அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.

தற்போது, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள கவிதாவின் நீதிமன்ற காவல் முடிவடைவதையொட்டி அவர், டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது கவிதாவை ஏப்ரல் 23 வரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி காவிரி பவேஜா உத்தரவிட்டார். இதையடுத்து கவிதா திகார் சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டார். அங்கு அவரிடம் நேற்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது ஆம்ஆத்மி கட்சிக்கு ரூ.100 கோடி வழங்கியது தொடர்பாக கேள்வி எழுப்பியதாக கூறப்படுகிறது.

The post திகார் சிறையில் கவிதாவிடம் சிபிஐ விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBI ,Kavida ,Tigar ,NEW DELHI ,DELHI ,R. S. ,President ,Kavita ,Dikhar ,Telangana ,Dikar ,Dinakaran ,
× RELATED டெல்லி மதுபான கொள்கை வழக்கில்...