×

விசிக பிரமுகர் வீட்டில் ரெய்டு

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே, மோலாண்டிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் ஆதிதமிழன் (எ) பெருமாள். விசிக நிர்வாகி. இவரது வீட்டில் பணம் பதுக்கி வைத்திருப்பதாக வந்த தகவலின்பேரில், தேர்தல் பறக்கும் படை அலுவலர்கள் வருமானவரித்துறை உதவியுடன் நேற்று அவரது வீட்டிற்கு சோதனை செய்தனர். தொடர்ந்து வீட்டுக்கு வெளியே உள்ள பகுதிகளிலும் சோதனையில் ஈடுபட்டனர். கார், கழிவறை, கொட்டகை, படுதாக்கள் ஆகியவற்றையும் சோதனை செய்தனர்.

சுமார் அரை மணி நேரம் நடந்த சோதனையில், வீட்டில் பணமோ நகையோ எதுவும் கிடைக்கவில்லை என்று கூறி அதிகாரிகள் வெளியே வந்தனர். தேர்தல் நேரத்தில் யாரோ வேண்டுமென்றே பொய்யான தகவல்களை பரப்பி தனது பெயருக்கு கெட்ட பெயரை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகின்றனர். அவர்களைக் கண்டறிந்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெருமாள் தெரிவித்தார்.

The post விசிக பிரமுகர் வீட்டில் ரெய்டு appeared first on Dinakaran.

Tags : Visica Pramukar ,Aditamizhan (A) Perumal ,Molandipatti ,Omalur ,Salem district ,Electoral Flying Force ,Income Tax Department ,Visika Pramukar ,Dinakaran ,
× RELATED திரவ நைட்ரஜன் மூலம் தயாரிக்கப்படும்...