×

பாரா டென்பின் பவுலிங்; 4 தங்கப் பதக்கம் வென்றது தமிழகம்

பெங்களூருவில் நடந்த 4வது தேசிய பாரா டென்பின் பவுலிங் போட்டியின் (மார்ச் 25-26) ஆண்கள் மற்றும் மகளிர் பிரிவில் தமிழக வீரர், வீராங்கனைகள் 4 தங்கப் பதக்கங்களை வென்று சாதனை படைத்தனர்.

8 மாநிலங்களில் இருந்து மொத்தம் 101 பேர் பங்கேற்ற இந்த தொடரின் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதலிடம் பிடித்த ஹரி நாராயணன், இரட்டையர் பிரிவில் சாந்தா முத்துவேலுடன் இணைந்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். மகளிர் ஒற்றையர் பிரிவில் முதல் 2 இடங்களைப் பிடித்த மாரீஷ்வரி, கிரிஷ்னவாணி இரட்டையர் பிரிவில் இணைந்து தங்கம் வென்று அசத்தினர்.

The post பாரா டென்பின் பவுலிங்; 4 தங்கப் பதக்கம் வென்றது தமிழகம் appeared first on Dinakaran.

Tags : Para Denpin Bowling ,Tamil Nadu ,4th National Para Tenpin Bowling Tournament ,Bengaluru ,Para Tenpin Bowling ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...