×

ஹாட்ரிக் வெற்றிக்கு கேகேஆர் ஆர்வம்; தடைபோடுமா டெல்லி கேப்பிடல்ஸ்?

விசாகப்பட்டினம்: ஐபிஎல் டி20 தொடரில், விசாகப்பட்டினத்தில் இன்று இரவு நடைபெறும் 16வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. டெல்லி அருண் ஜெட்லி அரங்கில் பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால், கேப்பிடல்ஸ் அணியின் 2வது உள்ளூர் ஆட்டமும் விசாகப்பட்டினத்தில் நடக்கிறது. டெல்லி விளையாடிய முதல் 2 லீக் ஆட்டங்களில் பஞ்சாப், ராஜஸ்தான் அணிகளிடம் தோல்வியை சந்தித்தாலும், விசாகப்பட்டினத்தில் நடந்த ஆட்டத்தில் ரிஷப் பன்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் முதல் வெற்றியை ருசித்தது. அதிலும் பலம் வாய்ந்த நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை சாய்த்தது, டெல்லி வீரர்களுக்கு புது உத்வேகத்தை கொடுத்து.

அதே உற்சாகத்துடன் அடுத்து முன்னாள் சாம்பியன் கொல்கத்தாவை எதிர்கொள்கிறது. பிரித்வி ஷா, டேவிட் வார்னர், ரிஷப், மார்ஷ் ஆகியோர் நல்ல பார்மில் இருப்பதால், ஷ்ரேயாஸ் தலைமையிலான கொல்கத்தா அணி பவுலர்களுக்கு சரியான சவால் காத்திருக்கிறது. அதே சமயம், தொடர்ச்சியாக 3வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்புடன் களமிறங்கும் கொல்கத்தா அணிக்கு சால்ட், நரைன், வெங்கடேஷ், ஷ்ரேயாஸ், ரஸ்ஸல், அங்குல் ராய்… என மிரட்டலான பேட்டிங் வரிசை நம்பிக்கை அளிக்கிறது. காஸ்ட்லி வேகம் ஸ்டார்க் கலக்கினால், கேகேஆர் அணிக்கு அது கூடுதல் சாதகமாக இருக்கும். இரு அணிகளுமே வெற்றிக்காக வரிந்துகட்டும் நிலையில், இன்றைய ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

The post ஹாட்ரிக் வெற்றிக்கு கேகேஆர் ஆர்வம்; தடைபோடுமா டெல்லி கேப்பிடல்ஸ்? appeared first on Dinakaran.

Tags : KKR ,Delhi Capitals ,Visakhapatnam ,Kolkata Knight Riders ,IPL T20 ,Delhi ,Arun Jaitley Arena ,Capitals' ,Dinakaran ,
× RELATED ஐபிஎல் 2024: டெல்லி கேபிடல்ஸ் அணிக்கு 267...