×

மணல் குவாரி விவகாரத்தில் கலெக்டர்கள் வரும் 25ல் ஈடி முன்பாக ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: மணல் குவாரி விவகாரம் தொடர்பாக மாவட்ட ஆட்சியாளர்களுக்கு அமலாக்கத்துறையால் வழங்கப்பட்ட சம்மனுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய இடைக்கால தடை உத்தரவுக்கு எதிராக அமலாக்கத்துறை தரப்பில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.எம்.திரிவேதி மற்றும் பங்கஜ் மித்தல் ஆகியோர் அமர்வு, ‘‘இந்த விவகாரத்தில் சம்மனுக்கு தடை விதிக்க முடியாது.

தேர்தல் முடிந்த பிறகு வரும் 25ம் தேதி சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியர்கள் அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி உரிய விளக்கத்தை முழு தரவுகளுடன் தெரிவிக்க வேண்டும்’’ என்று உத்தரவிட்டு, வழக்கு விசாரணையை மே மாதம் 6ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

The post மணல் குவாரி விவகாரத்தில் கலெக்டர்கள் வரும் 25ல் ஈடி முன்பாக ஆஜராக வேண்டும்: உச்ச நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : ED ,SC ,New Delhi ,Supreme Court ,PM Trivedi ,Pankaj Mittal ,Enforcement Department ,High Court ,District ,Dinakaran ,
× RELATED ஈடி, சிபிஐ நடவடிக்கை குறித்த...