×

கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க இந்தியா கோரவில்லை: இலங்கை அமைச்சர் தகவல்

கொழும்பு: கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க இந்தியா கோரிக்கை எதையும் வைக்கவில்லை என்று இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியுள்ளார். கச்சத்தீவு பிரச்னையை பாஜ கிளப்பியுள்ள நிலையில் இலங்கை அமைச்சர் ஜீவன் தொண்டமான் கூறியதாவது: கச்சத்தீவு விவகாரம் தொடர்பாக இந்தியா இதுவரை எந்த அதிகாரப்பூர்வ தகவலையும் எங்களுக்கு அனுப்பவில்லை.

கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்கும்படி இந்திய அரசு இலங்கையிடம் எந்தவித கோரிக்கையும் வைக்கவில்லை. அப்படி அனுப்பினால் அதற்கு இலங்கை வெளியுறவுத்துறை உரியவகையில் பதில் அளிக்கும். இலங்கையைப் பொறுத்தவரை கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டுக்குள் உள்ளது” என்றார். கச்சத் தீவு விவகாரம் தொடர்பாக இலங்கை அமைச்சரவை விவாதிக்கவில்லை என்று மற்றொரு அமைச்சர் பந்துல குணவர்தனா தெரிவித்தார்.

The post கச்சத்தீவை திரும்ப ஒப்படைக்க இந்தியா கோரவில்லை: இலங்கை அமைச்சர் தகவல் appeared first on Dinakaran.

Tags : India ,Colombo ,Minister ,Jeevan Thondaman ,Katchathivi ,BJP ,Sri ,
× RELATED என்னை வீழ்த்த வெளிநாட்டு சக்திகள் சதி: பிரதமர் மோடி பேச்சு