×

சில்லி பாயின்ட்…

* கேகேஆர் – ராஜஸ்தான் அணிகளிடையே ஏப்.17ம் தேதி கொல்கத்தாவில் நடைபெற இருந்த ஐபிஎல் லீக் ஆட்டம், ராம நவமி கொண்டாட்டத்தையொட்டி ஒருநாள் முன்னதாக ஏப்.16ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளிடையே ஏப்.16ம் தேதி அகமதாபாத்தில் நடக்க இருந்த ஆட்டம் ஏப்.17க்கு மாற்றப்பட்டுள்ளது.

* வங்கதேச அணியுடனான 2வது டெஸ்டில், இலங்கை அணி 2வது இன்னிங்சில் 7 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து டிக்ளேர் செய்தது. இதையடுத்து, 511 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் துரத்தலை தொடங்கிய வங்கதேசம் 4ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 268 ரன் எடுத்துள்ளது (67 ஓவர்). மோமினுல் 50, ஷாகிப் ஹசன் 36, லிட்டன் 38, ஹசன் ஜாய் 24, கேப்டன் ஷான்டோ 20, ஜாகிர் 19, ஷகாதத் 15 ரன்னில் பெவிலியன் திரும்பினர்.  மெஹிதி ஹசன் மிராஸ் 44 ரன், தைஜுல் இஸ்லாம் 10 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 3 விக்கெட் மட்டுமே இருக்க, இன்னும் 243 ரன் தேவை என்ற நிலையில் வங்கதேசம் இன்று கடைசி நாள் சவாலை சந்திக்கிறது.

* சட்டோகிராம் டெஸ்டில் விளையாடி வந்த இலங்கை விக்கெட் கீப்பர்/பேட்ஸ்மேன் தினேஷ் சண்டிமால், நெருங்கிய உறவினரின் உடல்நிலை காரணமாக நேற்று கொழும்பு திரும்பினார். அவருக்கு பதிலாக மாற்று வீரர் இன்று ஃபீல்டிங்கில் ஈடுபட உள்ளார்.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : IPL league ,KKR ,Rajasthan ,Kolkata ,Ram Navami ,Gujarat Titans ,Delhi Capitals ,Dinakaran ,
× RELATED 9 விக்கெட் வித்தியாசத்தில் மும்பையை...