×

கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டி வேட்பாளரை தாக்கியதாக நாதக நிர்வாகிகள் 3 பேர் கைது

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டியிடும் வேட்பாளரை தாக்கிய, நாம் தமிழர் கட்சி நகர செயலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர். தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த எச்சனஹள்ளியைச் சேர்ந்தவர் ஆறுமுகம்(51). இவர், திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளராக உள்ளார். நாடாளுமன்ற தேர்தலில், திராவிட தெலுங்கு தேசம் கட்சி, பாரதிய பிரஜா ஐக்கிய பார்ட்டி கட்சியுடன் இணைந்து, தமிழகத்தில் 13 இடங்களில் போட்டியிடுகிறது. இந்த கட்சிக்கு நாம் தமிழர் கட்சி முன்பு பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று முன்தினம், வேட்புமனு பரிசீலனை முடிந்து, ஓசூருக்கு காரில் சென்ற ஆறுமுகத்தை, 10க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்ற நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள், போலுப்பள்ளி கும்மனூர் கூட்ரோடு அருகே வழிமறித்து, சரமாரியாக தாக்கியதுடன், வேட்புமனுவை வாபஸ் பெறாவிட்டால் கொலை செய்து விடுவோம் என மிரட்டி விட்டு சென்றனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த குருபரப்பள்ளி போலீசார் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி நகர செயலாளர் அருண்மொழி (28), கட்சியின் உறுப்பினர் கமல்(30), மத்திய மாவட்ட செயலாளர் நரேஷ்குமார்(39) ஆகியோரை நேற்று கைது செய்தனர்.

The post கரும்பு விவசாயி சின்னத்தில் போட்டி வேட்பாளரை தாக்கியதாக நாதக நிர்வாகிகள் 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Nataka ,Krishnagiri ,Naam Tamil Party ,Arumugam ,Echanahalli ,Nallampally ,Dharmapuri district ,Nathaka ,
× RELATED வீரப்பன் மகளுடன் பாமகவினர் வாக்குவாதம்