×

விவசாயி சின்னத்தில் போட்டியா? கொல்வோம்… வேட்பாளர் மீது தாக்குதல், நாம் தமிழர் கட்சியினர் அராஜகம்

கிருஷ்ணகிரி: திராவிட தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைமை ஒருங்கிணைப்பாளர் ஆறுமுகம் (51). இவரது கட்சி நாடாளுமன்ற தேர்தலில், பாரதிய பிரஜா ஐக்கிய பார்ட்டி கட்சியுடன் இணைந்து தமிழகத்தில் 13 இடங்களில் போட்டியிடுகிறது. ஆறுமுகம் கிருஷ்ணகிரி தொகுதியில் போட்டியிடுகிறார். இவருக்கு நாம் தமிழர் கட்சி முன்பு பயன்படுத்தி வந்த கரும்பு விவசாயி சின்னம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தன்னை, நாம் தமிழர் கட்சி பிரமுகர்கள் தாக்கியதாக கூறி, ஆறுமுகம் ஓசூர் அரசு மருத்துவனையில் சேர்ந்துள்ளார். இதுகுறித்து வேட்பாளர் ஆறுமுகம் கூறுகையில், ‘நான் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று வேட்புமனு பரிசீலனைக்கு வந்தபோது, நாம் தமிழர் கட்சி நிர்வாகிகள் என்னை பின் தொடர்ந்தனர்.

இதையறிந்த நான் என் நண்பரின் காரில் ஓசூர் நோக்கி சென்றேன். கிருஷ்ணகிரியில் இருந்து 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள கும்மனூர் கூட்ரோடு அருகே சென்ற போது, 10க்கும் மேற்பட்ட டூவீலர்களில் வந்த நாம் தமிழர் கட்சியினர்சரமாரியாக தாக்கினர். மேலும் விவசாயி சின்னத்தில் நீ போட்டியிடக் கூடாது. நாளைக்குள் வேட்பு மனுவை வாபஸ் பெறாவிட்டால் கொன்று விடுவோம் எனக்கூறி மிரட்டி சென்றனர்’ என்றார்.

The post விவசாயி சின்னத்தில் போட்டியா? கொல்வோம்… வேட்பாளர் மீது தாக்குதல், நாம் தமிழர் கட்சியினர் அராஜகம் appeared first on Dinakaran.

Tags : Krishnagiri ,Dravida Telugu Desam Party ,chief coordinator ,Arumugam ,Tamil Nadu ,Bharatiya Praja United Party ,
× RELATED கிருஷ்ணகிரியில் விவசாயி மாயம்