×

தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜ அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு

புதுடெல்லி: கிராமப்புற மக்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் கடந்த 2006ல் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் கொண்டுவரப்பட்டது. 100 நாள் வேலை திட்டம் என்று அழைக்கப்படும் திட்டத்தில் பதிவு செய்துகொண்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்துடன் 100 நாட்களுக்கு வேலைகள் தரப்படுகிறது. இத்திட்டத்தில் நாடு முழுவதும் 5.97 கோடி குடும்பங்கள் வேலைவாய்ப்பு பெற்றுள்ளன.

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் இந்த வேலைகளுக்கு வழங்கப்படும் தினசரி குறைந்தபட்ச ஊதியத்தை ரூ. 400ஆ க உயர்த்துவோம் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்திருந்தது. காங்கிரசின் இந்த அறிவிப்புக்கு நாடு முழுவதும் வரவேற்பு எழுந்துள்ளது. இதை கண்டு பாஜ கடும் அச்சத்தில் உள்ளது. இதையடுத்து, 100 நாள் வேலை திட்ட ஊதியத்தை ஒன்றிய அரசு உயர்த்தியுள்ளது. இதன்மூலம் ஏற்கெனவே வழங்கப்பட்ட தொகையில் இருந்து அதிகபட்சமாக ரூ.34 வரை ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வருகிறது. தேர்தல் ஆணைய அனுமதி கோரப்பட்டு, அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அந்த வகையில், 2023-24 நிதி ஆண்டுக்கு அரியானா மாநிலத்தில் தினசரி ஊதியம் ரூ.357-ல் இருந்து ரூ.374 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
ராஜஸ்தானில் ரூ.255-ல் இருந்து ரூ.266 ஆகவும், பீகார், ஜார்க்கண்டில் ரூ.228-ல் இருந்து ரூ.245 ஆகவும், சட்டீஸ்கர், மத்திய பிரதேசத்தில் ரூ.221-ல் இருந்து ரூ.243 ஆகவும்உயர்த்தப்பட்டுள்ளது.

ஊதிய உயர்வு 4 % முதல் 10 % வரை உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தினசரி ஊதியம் ரூ.294 வழங்கப்படுகிறது. இது 2024-25 நிதி ஆண்டுக்கு ஊதியம் ரூ.319 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இது 8.5 % உயர்வு. ரூ.25 கூடுதலாக அளிக்கப்படுகிறது. உபி மற்றும் உத்தரகாண்டில் ரூ.7 உயர்த்தப்பட்டுள்ளது. இரு மாநிலங்களிலும் ஊதியம் ரூ.237 ஆக வழங்கப்படும். காங்கிரஸ் பொது செயலாளர் ஜெயராம் ரமேஷ் டிவிட்டரில் பதிவிடுகையில், காங்கிரசின் வாக்குறுதியை விட ஒன்றிய அரசின் ஊதிய உயர்வு குறைவாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

The post தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜ அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Congress ,BJP ,Union Govt. ,New Delhi ,Union government ,Dinakaran ,
× RELATED மக்களிடம் பயமுறுத்தும் வகையில் பாஜ...