×

திருத்தணி கோயிலில் 22 நாட்களில் பக்தர்களின் காணிக்கை ரூ.1.05 கோடி, 382 கிராம் தங்கம்

திருவள்ளூர்: திருத்தணியில் ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக சிறந்து விளங்கும் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உள்ளது. இத்திருக்கோயிலுக்கு தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி என பல்வேறு மாநிலங்களில் இருந்து முருகப்பெருமானை வழிபட்டு செல்வார்கள். அப்போது பக்தர்கள் தங்களது வேண்டுதலை நிறைவேற்ற காணிக்கையாக மலை கோயிலில் வைக்கப்பட்டிருந்த உண்டியல்களில் ரொக்கப் பணம், வெள்ளி மற்றும் தங்க நகைகளை காணிக்கையாக செலுத்துவது வழக்கம்.

இந்த நிலையில் திருத்தணி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் அறங்காவலர் குழுத்தலைவர் சு.ஸ்ரீதரன், இணை ஆணையரும், செயல் அலுவலருமான க.ரமணி, அறங்காவலர்கள் உஷா ரவி, கோ.மோகனன், வி.சுரேஷ்பாபு, மு.நாகன் ஆகியோர் முன்னிலையில் நேற்று உண்டியல்கள் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்த தேவர் மண்டபத்தில் உண்டியல் காணிக்கைகள் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட திருக்கோயில் ஊழியர்கள் கலந்துகொண்டு காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது கடந்த 22 நாட்களில் பக்தர்கள் உண்டியலில் செலுத்திய காணிக்கையாக ரொக்கமாக ரூ.1 கோடியே 5 லட்சத்து 54,987, 382 கிராம் தங்கம், 5 ஆயிரத்து 280 கிராம் வெள்ளி ஆகியவை காணிக்கையாக செலுத்தியிருந்ததாக கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

The post திருத்தணி கோயிலில் 22 நாட்களில் பக்தர்களின் காணிக்கை ரூ.1.05 கோடி, 382 கிராம் தங்கம் appeared first on Dinakaran.

Tags : Thiruthani Temple ,Thiruvallur ,Arulmigu Subramaniya Swami Temple ,Fifth Corps ,Thiruthani ,Murukapperuman ,Tamil Nadu ,Andhra Pradesh ,Karnataka ,Kerala ,Puducherry ,
× RELATED திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள...