×

பள்ளி பேருந்தை உரசி செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளால் பாதிப்பு

பந்தலூர், மார்ச் 28: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே கொளப்பள்ளி பஜாரில் இருந்து அரசு மேல்நிலைப்பள்ளி மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் ஸ்கூல் ரோடு பகுதியில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உயர் அழுத்த மின் கம்பிகள் தாழ்வான நிலையில் செல்வதால் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் மற்றும் பள்ளி பேருந்துகள் செல்லும்போது உயர் அழுத்த மின் கம்பிகள் வாகனங்களில் உரசி செல்வது போல் இருப்பதால் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. தாழ்வான மின் கம்பியால் அசம்பாவிதங்கள் ஏதேனும் ஏற்படுவதற்குள் மின்வாரியத்தினர் உரிய ஆய்வு செய்து உயர் அழுத்த மின் கம்பிகளை உயர்த்தி கட்டுவதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post பள்ளி பேருந்தை உரசி செல்லும் உயர் அழுத்த மின் கம்பிகளால் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Bandalur ,School Road ,Nilgiris district ,Kolappally Bazar ,Government Higher Secondary School ,Government Primary Health Centre ,Dinakaran ,
× RELATED பந்தலூர் பகுதியில் பலாக்காய் சீசன் களைக்கட்டுகிறது