×

மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சார்பில் மாணவிகளுக்கு ரூ. 71 லட்சம் மதிப்பிலான காசோலைகள்

கோவை, மார்ச் 28: மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சார்பில் சிஎஸ்ஆர் நிகழ்ச்சி தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக அரங்கத்தில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கீதாலட்சுமி கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் அவர் 2ம் கட்டமாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் 35 பள்ளி மற்றும் கல்லூரியில் பயிலும் மாணவிகள் 241 பேருக்கு மலபார் குழுமம் சார்பில் ரூ.21 லட்சத்து 84 ஆயிரம் மதிப்பிலான காசோலையை மாணவிகளுக்கு வழங்கினார்.

நிகழ்ச்சியில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பதிவாளர் டாக்டர். தமிழ்வேந்தன், பல்கலைக்கழக டீன் டாக்டர் வெங்கட பழனிசாமி மற்றும் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் தமிழ்நாடு மேற்கு மண்டல தலைவர் நௌசாத், ஒப்பணக்கார வீதி கிளை தலைவர் மார்ட்டின், கிளை இணை வர்த்தக மேலாளர் தேவராஜ் ஆகியோர் உடனிருந்தனர். கோயம்புத்தூர் மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சார்பில் இந்த நிதியாண்டில் இதுவரை 93 பள்ளிகளை சேர்ந்த 754 மாணவிகளுக்கு மொத்தம் ரூ.71 லட்சம் மதிப்பிலான காசோலைகள் வழங்கப்பட்டுள்ளது.

The post மலபார் கோல்டு அண்ட் டைமண்ட்ஸ் சார்பில் மாணவிகளுக்கு ரூ. 71 லட்சம் மதிப்பிலான காசோலைகள் appeared first on Dinakaran.

Tags : Malabar Gold and Diamonds ,Coimbatore ,Tamil Nadu Agricultural University ,University ,-Chancellor ,Dr. ,Geethalakshmi ,
× RELATED மாணவ ஊரக வேளாண் பணி