×

நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம்

ஊட்டி, மார்ச் 27: நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் மற்றும் தோழமை கட்சி தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் ஊட்டியில் நடந்தது. மாவட்ட திமுக செயலாளர் முபாரக் தலைமை வகித்தார். தேர்தல் பணி செயலாளர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரன், கூடலூர் சட்டமன்ற தொகுதி பார்வையாளர் பல்லவிராஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். நீலகிரி தொகுதி பொறுப்பாளர் கருணாநிதி அனைவரையும் வரவேற்றார். நீலகிரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.ராசா கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

இக்கூட்டத்தில், மாவட்ட திமுக அவைத்தலைவர் போஜன், மாவட்ட துணை செயலாளர்கள் ரவிகுமார், தமிழ்செல்வன், லட்சுமி, மாவட்ட பொருளாளர் நாசர் அலி, தலைமை செயற்குழு உறுப்பினர்கள் திராவிடமணி, இளங்கோவன், காசிலிங்கம், செந்தில் ரங்கராஜ், ராஜூ, மாநில அணிகளின் துணை செயலாளர்கள் பொந்தோஸ், அன்வர்கான், வாசிம்ராஜா, பரமேஷ்குமார், காங்கிரஸ் மாவட்ட தலைவர் கணேஷ், ஏஐசிசி., உறுப்பினர்கள் கோசி பேபி, சுப்ரமணியம், மார்க்சிஸ்ட் கம்யூ. மாவட்ட செயலாளர் பாஸ்கரன், நாகராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்திய கம்யூ. மாநில குழு உறுப்பினர் பெள்ளி, கனி, முஸ்லீம் லீக் மாவட்ட தலைவர் வாப்பு ஹாஜி, மாவட்ட செயலாளர் அனீபா, மதிமுக மாவட்ட பொறுப்பாளர் சிவகுமார், செயற்குழு உறுப்பினர் ஆரிப் சேட், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட தலைவர் அப்துல் சமது, மாவட்ட செயலாளர் அபுதாகீர், மக்கள் நீதி மய்யம் மாவட்ட செயலாளர்கள் ஜாகிர் ஹாசன், சித்திக், மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட செயலாளர் தமீமுல் அன்சாரி, திராவிட தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் அர்ஜுனன் ஆகியோர் கலந்துகொண்டு தங்கள் ஆலோசனைகளை வழங்கினர். கூட்டத்தில் திமுக நகர, ஒன்றிய, பேரூர் செயலாளர்கள், பொதுக்குழு உறுப்பினர்கள், அணிகளின் அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் மற்றும் திமுக தோழமை கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

The post நீலகிரி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nilgiri district DMK ,Ooty ,Doshmai Party ,District DMK ,Mubarak ,Election Secretary ,Tourism Minister ,K. Ramachandran ,Dinakaran ,
× RELATED கோடை சீசனை முன்னிட்டு...