×

காங்கயம் பகுதியில் வெள்ள வேலமர பட்டை மரங்கள் மடியும் அபாயம்

 

காங்கயம், மார்ச் 26: காங்கயம் பகுதியில் காடுகளில் வெள்ள வேலமரத்தின் பட்டைகளை இரவு நேரத்தில் மர்ம நபர்கள் உறித்து செல்வதால், மரங்கள் மடியும் அபாயத்தில் இருப்பதாக விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர். காங்கயம், ஊதியூர், சிவன் மலை உள்ளிட்ட பகுதிகளில் மானாவாரி விவசாய நிலங்களிலும், மாநில மற்றும் கிராம சாலை ஓரங்களிலும் அதிக அளவில் வெள்ள வேலமரங்கள் வளர்ந்து உள்ளன. விளைச்சல் நிலங்களில் உள்ள மரங்கள் ஆடுகளுக்கு நிழலாக இருக்க விவசாயிகள் வளர்க்கின்றனர்.

காங்கயம், ஊதியூர், சிவன்மலை சுற்று பகுதிகளில் கடந்த சில மாதங்களாக விவசாய தோட்டங்களில் உள்ள வளர்ந்த வெள்ள வேலமரத்தின் பட்டைகளை சாராயம் காய்ச்ச தொடர்ச்சியாக மர்ம நபர்கள் இரவு நேரத்தில் தோட்டத்துக்குள் புகுந்து உறித்து செல்வதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர். மேலும் சாராயம் காய்ச்சுபவர்கள் மட்டுமே வேலமரப்பட்டையை எடுப்பர் எனவும், வேறு எந்த பயன்பாட்டுக்கும் இந்த பட்டை பயன்படாது எனவும் விவரமம் அறிந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

வேலமரத்தின் பட்டை தான் சாராயத்தின் மூலப் பொருளாகும். இவ்வாறு பட்டைகள் உரிக்கப்படுவதால் நாளடைவில் மரம் மடிந்து விடுவதோடு, மழை பொழிவிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். வனத்துறை அதிகாரிகள், காங்கயம் போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து வெள்ள வேலமர பட்டைகள் உறிக்கப்படுவதை தடுக்க வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

The post காங்கயம் பகுதியில் வெள்ள வேலமர பட்டை மரங்கள் மடியும் அபாயம் appeared first on Dinakaran.

Tags : Gangayam ,Kangyam ,Kangayam ,Pedgur ,Sivan Hill ,Dinakaran ,
× RELATED காங்கயத்தில் அம்பேத்கர் பிறந்தநாள் விழாவில் அமைச்சர் மலர் தூவி மரியாதை