×

கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்கள்.. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!!

கோவை: கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்களை பங்கேற்க வைத்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் ஏப்.19ம் தேதி நடக்கிறது. தமிழ்நாட்டுக்கு ஏற்கனவே 5வது முறை அடுத்தடுத்து விசிட் அடித்த பிரதமர் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு முதன்முறையாக கோவையில் நேற்று ரோடு ஷோவில் பங்கேற்றார்.

பிரதமர் மோடி பங்கேற்ற ரோடு ஷோவில் பள்ளி மாணவர்கள் சீருடை அணிந்து பங்கேற்றனர். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தேர்தல் ஆணைய விதிகள் மீறி பிரதமர் பேரணியில் பள்ளி மாணவர்களை பங்கேற்க வைத்ததற்கு பல்வேறு தரப்பிடம் இருந்து கடும் கண்டனம் எழுந்தது. இந்நிலையில், பரப்புரைகளில் குழந்தைகளை பயன்படுத்த தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ளதை சுட்டிக்காட்டி எழுந்த புகாரில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், கோவையில் உள்ள அரசு உதவிப்பெறும் பள்ளியான ஸ்ரீ சாய்பாபா வித்யாலயம் மாணவர்கள் நேற்று மோடி பேரணியில் பங்கேற்க வைக்கப்பட்டனர். கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்களை பங்கேற்க வைத்த தனியார் பள்ளி தலைமை ஆசிரியர், பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோவை தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

 

The post கோவையில் பிரதமர் மோடி பேரணியில் மாணவர்கள்.. தனியார் பள்ளி ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு..!! appeared first on Dinakaran.

Tags : Modi ,Coimbatore ,Lok Sabha elections ,Tamil Nadu ,PM Modi ,
× RELATED மக்களவைத் தேர்தல்: உண்மையான...