×

நாட்டின் நலன் கருதி, பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி

விழுப்புரம்: நாட்டின் நலன் கருதி, பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மக்களவை தேர்தல் தொடர்பாக பா.ஜ.க. பா.ம.க. கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை- பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பா.ஜ.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அன்புமணி, அண்ணாமலை ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது பேசிய அண்ணாமலை; பாஜக கூட்டணியில் இணைந்த ராமதாஸுக்கு நன்றி. ராமதாஸ் யோசித்த பல விஷயங்களை மோடி செயல்படுத்தி வருகிறார். தேசிய ஜனநாயக கூட்டணியின் மூத்த தலைவராக பாமக நிறுவனர் ராமதாஸ் இருப்பார். தமிழகம் மட்டுமின்றி தேசிய அளவிலும் மூத்த தலைவராக ராமதாஸ் இருப்பார். 2026ம் ஆண்டு தமிழக அரசியலில் கண்டிப்பாக மாற்றம் வரும். பாமகவின் முடிவால் தமிழக அரசியலில் நேற்றிரவில் இருந்து மாற்றம் ஏற்பட்டுள்ளது. சேலத்தில் பிரதமர் மோடி பங்கேற்கும் கூட்டத்தில் ராமதாஸ், அன்புமணி பங்கேற்பார்கள்.

சேலம் கூட்டம் இன்று நடைபெறுவதால் கூட்டணி ஒப்பந்தம் மட்டுமே கையெழுத்தானது; தொகுதி விவரங்கள் பின்னர் வெளியிடப்படும். பின்னர் பேசிய அன்புமணி; வரும் மக்களவைத் தேர்தலை பாஜக பாமக இணைந்து எதிர்கொள்ள உள்ளோம். கடந்த 10 ஆண்டுகளாக பாஜகவின் அங்கமாக பாமக இருந்து வருகிறது. நாட்டின் நலன் கருதி, பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம். மோடி 3வது முறையாக பிரதமராக தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறினார்.

The post நாட்டின் நலன் கருதி, பிரதமர் மோடியின் நல்லாட்சி தொடர பாஜகவுடன் கூட்டணி அமைத்துள்ளோம்: அன்புமணி ராமதாஸ் பேட்டி appeared first on Dinakaran.

Tags : BJP ,Modi ,Anbumani Ramadas ,Viluppuram ,Bhamaka ,President ,J. K. Pa. M. K. ,Annamalai- Bamaka ,
× RELATED பாஜகவில் இணைந்தவர்கள் மீதான...