×

தாளவாடி மலைப்பகுதியில் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: பள்ளி மாணவ, மாணவிகள் அவதி


சத்தியமங்கலம்: தாளவாடி மலைப்பகுதியில் சாலையில் மரம் முறிந்து விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் பள்ளி செல்லும் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகினர். ஈரோடு மாவட்டம் தாளவாடி மலைப் பகுதியில் 50க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. தாளவாடியில் இருந்து மலை கிராமங்களுக்கு அரசு பேருந்துகள் இயக்கப்படுகிறது. மலை கிராமத்தை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்லும் தொழிலாளர்கள் அரசு பேருந்தையே பயன்படுத்துகின்றனர்.

இந்த நிலையில் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் சாலையில் தொட்டபுரம் அருகே சாலை ஓரத்தில் இருந்த ஒரு மரம் இன்று காலை வேருடன் சாய்ந்து சாலையில் முறிந்து விழுந்தது. இதனால்அப்பகுதியில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. அப்போது மலை கிராமங்களில் உள்ள பள்ளி மாணவர்களை ஏற்றி செல்வதற்காக சென்ற அரசு பேருந்து மரம் முறிந்து விழுந்ததால் செல்ல முடியாமல் நின்றது. இதனால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் அவதியடைந்தனர். இதுகுறித்து உடனடியாக நெடுஞ்சாலை துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த நெடுஞ்சாலைத் துறையினர் கிராம மக்கள் உதவியுடன் சாலையில் முறிந்து விழுந்த மரத்தை வெட்டி அகற்றினர். இதனால் தாளவாடியில் இருந்து தலமலை செல்லும் வழியில் உள்ள மலை கிராமங்களுக்கு ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

The post தாளவாடி மலைப்பகுதியில் சாலையில் மரம் முறிந்து விழுந்து போக்குவரத்து பாதிப்பு: பள்ளி மாணவ, மாணவிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Thalawadi hills ,Sathyamangalam ,Thalawadi ,Talawadi ,Erode district ,Dinakaran ,
× RELATED பண்ணாரி வனப்பகுதியில் உடல்நலம்...