×

100வது டெஸ்ட்டில் களம் இறங்கும் முதல் தமிழக வீரர்… அஸ்வின் புதிய சாதனை படைப்பாரா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு

தர்மசாலா : இந்தியா-இங்கிலாந்து இடையே 5 போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் ஐதராபாத்தில் நடந்த முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து வென்ற நிலையில், தொடர்ந்து விசாகப்பட்டினம், ராஜ்கோட், ராஞ்சியில் நடந்த 3 டெஸ்ட்டிலும் இந்தியா வென்று 3-1 என தொடரை கைப்பற்றிவிட்டது. இந்நிலையில் 5வது மற்றும் கடைசி டெஸ்ட் வரும் 7ம் தேதி (வியாழன்) தர்மசாலாவில் தொடங்குகிறது. இந்த போட்டி இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு 100 டெஸ்டாகும். இதுவரை அவர் 99 டெஸ்ட்டில் 507 விக்கெட் வீழ்த்தி உள்ளார். இதில் 8 முறை ஒரே டெஸ்ட்டில் 10 விக்கெட்டும். 35 முறை 5 விக்கெட்டும் எடுத்துள்ளார். பேட்டிங்கில் 5 சதம், 14 அரைசதத்துடன் 3309 ரன் எடுத்துள்ளார். இதுவரை 100வது டெஸ்ட்டில் இலங்கையின் முரளிதரன் வங்கதேசத்திற்கு எதிராக 2006ம் ஆண்டு 9 விக்கெட், ஆஸ்திரேலிய வீரர் வார்னே தென்ஆப்பிரிக்காவுக்கு எதிராக 8 விக்கெட், இந்தியாவின் கும்ப்ளே இலங்கைக்கு எதிராக 2005ல் 7 விக்கெட்டும் எடுத்துள்ளனர்.

இவர்களின் வரிசையில் 4வது வீரராக அஸ்வின் இணைவாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது. தர்மசாலாவில் இதற்கு முன் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒரே ஒரு டெஸ்ட்டில் ஆடி உள்ள அஸ்வின் 4 விக்கெட் மட்டுமே எடுத்துள்ளார். அஸ்வின் இதுவரை 507 விக்கெட் எடுத்துள்ள நிலையில் 100வது டெஸ்ட்டில் ஆடும்போது இதற்கு முன் முரளிதரன் மட்டுமே அதிக விக்கெட் (584) எடுத்துள்ளார்.
தர்மசாலாவில் அஸ்வின் 100வது டெஸ்ட்டில் களம் இறங்கும் நிலையில் இந்த மைல்கல்லை எட்டும் 14வது இந்திய வீரர் ஆவார். மேலும் 100வது டெஸ்ட்டில் ஆடும் முதல் தமிழக வீரர் என்ற சிறப்பையும் பெறுவார். எனவே அஸ்வினின் அடுத்த சாதனைக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

 

The post 100வது டெஸ்ட்டில் களம் இறங்கும் முதல் தமிழக வீரர்… அஸ்வின் புதிய சாதனை படைப்பாரா?: ரசிகர்கள் எதிர்பார்ப்பு appeared first on Dinakaran.

Tags : Ashwin ,Dharamsala ,England ,Hyderabad ,India ,Visakhapatnam ,Rajkot ,Ranchi ,Dinakaran ,
× RELATED விசா நடைமுறை விதி மீறல்; இங்கிலாந்தில் 12 இந்தியர்கள் கைது