×

லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்: கர்நாடகா முதல்வர் அறிவிப்பு

பெங்களூரு: நான் யாரிடமாவது லஞ்சம் வாங்கியது நிரூபிக்கப்பட்டால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன் என்று முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார். கர்நாடக மாநிலம் பெங்களூரு அரண்மனை மைதானத்தில் நடைபெற்ற மாநில அளவிலான ஒப்பந்ததாரர்களின் மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் சித்தராமையா, ‘நான் முதல்வராக இருந்த காலத்திலும், தற்போதைய ஆட்சிக் காலத்திலும் எவரிடமும் லஞ்சம் வாங்கவில்லை.

2013-2018ம் ஆண்டு வரை நான் முதலமைச்சராக இருந்த காலத்திலோ அல்லது தற்போது முதல்வராக இருக்கும் காலத்திலோ நான் ஐந்து பைசா லஞ்சம் வாங்கியதாக யாராவது நிரூபித்தால், நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிப்பேன்’ என்றார்.

 

The post லஞ்சம் வாங்கியதாக நிரூபித்தால் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவேன்: கர்நாடகா முதல்வர் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : Karnataka CM ,Bengaluru ,Chief Minister ,Siddaramaiah ,Bengaluru Palace Grounds ,Karnataka ,Dinakaran ,
× RELATED பாலங்கள் சீரமைப்பு பணி காரணமாக மைசூரு...