×

காங். மூத்த தலைவரின் மனைவி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி: சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கில் சிக்கிய காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித்தின் மனைவி லூயிஸின் ரூ.46 லட்சம் சொத்துகள் முடக்கப்பட்டது.
ஒன்றிய வெளியுறவுத்துறை முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான சல்மான் குர்ஷித்தின் லூயிஸ் குர்ஷித் தலைமையிலான டாக்டர் ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளையானது, கடந்த 2009ல் செயற்கைக் கால்கள் மற்றும் செயற்கைக்கால்களுக்கான கருவிகளை விநியோகம் செய்தது. அதில் அரசு நிதியை முறைகேடாக லூயிஸ் குர்ஷித் பயன்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது.

இதுதொடர்பாக 2017ல் அமலாக்கத்துறை சார்பில் சட்டவிரோதப் பணப் பரிமாற்ற வழக்கு பதியப்பட்டது. உத்தர பிரதேச மாநிலம் பரேலியில் அமைந்துள்ள எம்பி-எம்எல்ஏ நீதிமன்றத்தில் லூயிஸ் குர்ஷித் முறையாக ஆஜராகாததால், அவருக்கு எதிராக கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது. இதற்கிடையே லூயிஸ் குர்ஷித் மற்றும் அவரது கூட்டாளிகளுக்கு எதிரான வழக்கில், ஜாகீர் உசேன் நினைவு அறக்கட்டளையின் மூலம் ஆதாயமடைந்த ரூ.46 லட்சம் மதிப்புள்ள சொத்துகளை தற்போது அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

 

The post காங். மூத்த தலைவரின் மனைவி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Kong ,New Delhi ,Congress ,Salman Khurshid ,Louise ,Louis Khurshid ,Union External Affairs Minister ,Salman Khurshid… ,Dinakaran ,
× RELATED காங். முன்னாள் செய்தி தொடர்பாளர் குப்தா பாஜவில் அடைக்கலம்