×

ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டுக்கு அனுப்ப தடை

பெங்களூரு: ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு கர்நாடக ஐகோர்ட் தற்காலிக தடை விதித்தது. ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டுக்கு திருப்பி அனுப்பும் தீர்ப்பை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் ஜெ.தீபா, தீபக் மனு தாக்கல் செய்திருந்தார். சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்புக்கு தடைவிதிக்கக் கோரி ஜெ.தீபா, தீபக் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். ஜெ. நகைகளை உரிமை கோரியும் கர்நாடக கருவூலத்தில் உள்ள நகைகளை தமிழ்நாடுக்கு திருப்பி அனுப்ப தடை கோரியும் மனு தாக்கல் செய்துள்ளனர்.

The post ஜெயலலிதா நகைகளை தமிழ்நாட்டுக்கு அனுப்ப தடை appeared first on Dinakaran.

Tags : JAYALALITHA ,TAMIL NADU ,Bangalore ,Karnataka Aycourt ,JJ ,Jailalitha ,Karnataka ,Deepa ,Deepak ,Nadu ,
× RELATED சொல்லிட்டாங்க…