×

ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸை கிழித்து புதிய பூட்டை பூட்டி சென்ற ஜாபர் சாதிக்கின் தாயார்..!!

சென்னை: ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸை கிழித்து, ஜாபர் சாதிக்கின் தாயார் புதிய பூட்டை பூட்டி சென்றுள்ளார். சென்னை மயிலாப்பூர் வீட்டில் பணியாற்றிய காவலாளிகளை ஜாபர் சாதிக்கின் தாய் பணியில் இருந்து நீக்கியுள்ளார். நள்ளிரவில் ஆட்டோவில் வந்து நோட்டீஸை கிழித்துவிட்டு, புதிய பூட்டை பூட்டி சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. ரூ.2000 கோடி போதைப்பொருள் கடத்தல் வழக்கில், ஜாபர் சாதிக் தலைமறைவாக இருந்து வருகிறார். ஜாபர் சாதிக் ஆஜராக மத்திய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள் அவரது வீட்டில் நோட்டீஸ் ஒட்டியிருந்தனர்.

The post ஜாபர் சாதிக் வீட்டில் ஒட்டப்பட்டு இருந்த நோட்டீஸை கிழித்து புதிய பூட்டை பூட்டி சென்ற ஜாபர் சாதிக்கின் தாயார்..!! appeared first on Dinakaran.

Tags : Jaber Sadiq ,CHENNAI ,Zafar Sadiq ,Mylapore ,Dinakaran ,
× RELATED போதைப்பொருள் தடுப்புப் பிரிவு...