×

அதிமுக உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி

சென்னை: அதிமுக உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்ததாக கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் கூட்டணி குறித்து புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமியுடன், அதிமுக தொகுதி பங்கீட்டு குழு சந்திப்பு நடைபெற்றது. பேச்சுவார்த்தைக்கு பின், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, அதிமுக நிர்வாகிகள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தனர். அப்போது பேசிய கிருஷ்ணசாமி, அதிமுக கூட்டணியில் புதிய தமிழகம் கட்சி இடம்பெறுவது குறித்து பேச்சுவார்த்தை நடைபெற்றது. அதிமுக தலைமையிலான கூட்டணி, வெற்றி கூட்டணியாக இருக்கும். தேவையான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம் என்றார்.

The post அதிமுக உடனான பேச்சுவார்த்தை சுமுகமாக இருந்தது: புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி பேட்டி appeared first on Dinakaran.

Tags : AIADMK ,New Tamilnadu Party ,President ,Krishnasamy ,Chennai ,AIADMK Constituency Allocation Committee ,New Tamil Nadu Party ,Krishnaswamy ,
× RELATED சொல்லிட்டாங்க…