×

தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் SBI முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது :அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கு

சென்னை :தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் SBI முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார். கடந்த 27ம் தேதி மதுரை வந்த போது பிரதமர் மோடியை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் சந்தித்து இருந்தார். பிரதமர் – பிடிஆர் சந்திப்பு குறித்து அரசு சார்பில் தகவல் வெளியாகாத நிலையில், இந்த விவகாரம் பேசுபொருளானது. இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள தமிழக அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் “பிரதமரை சந்தித்தது தனிப்பட்ட விருப்பத்தின் பெயரில் இல்லை. பணி நிமித்தமே அவரை சந்தித்தேன். முதல்வர் கொடுத்த அரசாங்க உத்தரவை தான் நான் செய்தேன். மதுரை வந்த பிரதமர் மோடியை, அரசு சார்பில் வரவேற்க சென்றேன். பிரதமருக்கும், எனக்கும் தனிப்பட்ட உறவு போல் சிலர் போலி செய்திகளை பரப்புகின்றனர்.

தேர்தல் பத்திரங்கள் மூலம் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் தரவுகளை சேகரிக்க 2 நிமிடங்கள் கூட ஆகாது. அதற்கு 4 மாதம் தேவை என SBI கால அவகாசம் கோரியுள்ளது மிகவும் கேவலமானது.தரவுகளை நாளைக்கே சமர்ப்பிக்க நீதிமன்றம் உத்தரவிட்டாலும், அதனை வழங்கும் திறனை SBI வங்கி கொண்டிருக்க வேண்டும். இல்லையென்றால் அவர்கள் வங்கி தொழிலிலேயே இருக்கக் கூடாது.நாங்கள் அரசியல் செய்வது கொள்கைக்கும் தத்துவத்திற்கும் மட்டுமே; அரசியலுக்கு வந்த இலக்கினை நிறைவேற்றுவதே நல்ல அரசியல்வாதிக்கு அடையாளம்” என்றார். முன்னதாக தேர்தல் பத்திரங்கள் மூலமாக அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கியவர்கள் விவரங்களை வெளியிட, உச்சநீதிமன்றத்திடம் SBI 4 மாதகால அவகாசம் கோரியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The post தேர்தல் பத்திரங்கள் தொடர்பான வழக்கில் SBI முன்வைத்துள்ள வாதம் மிகவும் கேவலமானது :அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கு appeared first on Dinakaran.

Tags : SBI ,Minister Palanivel Thiagarajan ,Chennai ,Modi ,Madura ,Minister Palanivel Thiagarajan Thakku ,
× RELATED இந்தியாவில் வடகொரியாவின்...