×

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது தேர்தலுக்கான நாடகம்: சு.வெங்கடேசன் எம்.பி. கடும் தாக்கு

மதுரை: மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது தேர்தலுக்கான நாடகம் என்று சு.வெங்கடேசன் எம்.பி. குற்றம்சாட்டியுள்ளார். மதுரை எய்ம்ஸ்-க்கு அடிக்கல் நாட்டி 5 ஆண்டுகளுக்கு பின் கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. தேர்தலுக்காகவே மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது. 2019 நாடாளுமன்ற தேர்தலுக்காக அடிக்கல் நாட்டப்பட்டது; தற்போது நாடாளுமன்ற தேர்தலுக்காக கட்டுமான பணி தொடங்கப்பட்டுள்ளது என்று சு.வெங்கடேசன் எம்.பி. கடுமையாக சாடியுள்ளார்.

The post மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணியை ஒன்றிய அரசு தொடங்கியுள்ளது தேர்தலுக்கான நாடகம்: சு.வெங்கடேசன் எம்.பி. கடும் தாக்கு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Su Venkatesan ,AIIMS ,Union Government ,Madurai AIIMS ,Madurai AIIMS Hospital ,Dinakaran ,
× RELATED திருமணம் உள்ளிட்ட சமூக...