×

அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் கருத்துக்கு பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்..!!

சென்னை: அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி கூறிய கருத்துக்கு வைகுண்டர் தலைமைபதி நிர்வாகி பால பிரஜாபதி அடிகளார் கண்டனம் தெரிவித்துள்ளார். யாருடைய சுய லாபத்திற்காகவும் வரலாற்றை திரித்து கூற கூடாது என பால பிரஜாபதி அடிகளார் கூறியுள்ளார். சனாதனத்தை காக்க வந்தவர் வைகுண்டர் என்று ஆளுநர் கூறியதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அய்யா வைகுண்ட சுவாமியின் 192-வது அவதார தின விழா சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்றது. விழாவில் அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசிய கருத்தால் சர்ச்சை நிலவி வருகிறது.

The post அய்யா வைகுண்டர் குறித்து ஆளுநர் கருத்துக்கு பால பிரஜாபதி அடிகளார் கண்டனம்..!! appeared first on Dinakaran.

Tags : Bala Prajapati Adikalar ,Governor ,Ayya Vaikunder ,CHENNAI ,Executive Director ,Vaikunder ,RN Ravi ,
× RELATED சுதந்திரப் போராட்ட வீரர்களின்...