×

தங்கம் விலை ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,000ஐ தாண்டியது… 5 நாளில் ரூ.1,640 விலை அதிகரிப்பால் நகை விரும்பிகள் ஏமாற்றம்!!

சென்னை: தங்கம் விலை அதிரடியாக சவரனுக்கு ரூ.680 உயர்ந்தது. அதே நேரத்தில் தொடர்ந்து 5 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 உயர்ந்து நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தங்கம் விலை கடந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் இருந்து ஏற்றம், இறக்கத்தோடு உள்ளது. கடந்த 28ம் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ.46,480க்கு விற்கப்பட்டது. அதன் பிறகு தங்கம் விலை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. அதாவது 29ம் தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.40 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,520க்கு விற்கப்பட்டது. மார்ச் 1ம் தேதி கிராமுக்கு ரூ.25 அதிகரித்து ஒரு கிராம் ரூ.5840க்கும், சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ஒரு சவரன் ரூ.46,720க்கும் விற்கப்பட்டது.

மார்ச் 2ம் தேதி மட்டும் கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ஒரு கிராம் ரூ.5,940க்கும், சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ஒரு சவரன் ரூ.47,520க்கும் விற்கப்பட்டது. மார்ச் 3ம் தேதி தங்கம் விலையில் மாற்றமில்லை. நேற்று சவரன் ரூ. 80 குறைந்து ரூ.47,440க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. ஆபரணத்தங்கம் ஒரு கிராம் ரூ.85 உயர்ந்து ரூ.6,015க்கும் சவரன் ரூ.680 உயர்ந்து ரூ.48,120-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதே நேரத்தில் தொடர்ச்சியாக 5 நாளில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,640 உயர்ந்துள்ளது. இந்த தொடர் விலையேற்றம் நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதனிடையே சென்னையில் வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1.20 உயர்ந்து ரூ.78.20க்கு விற்பனை செய்யப்படுகிறது.

The post தங்கம் விலை ரூ.680 உயர்ந்து ஒரு சவரன் ரூ.48,000ஐ தாண்டியது… 5 நாளில் ரூ.1,640 விலை அதிகரிப்பால் நகை விரும்பிகள் ஏமாற்றம்!! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...