×

மோடி வருகையால் தமிழகத்திற்கு எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

சென்னை: தமிழகத்திற்கு மோடி வருகையால் எந்தவித மாற்றமும், தாக்கமும் ஏற்படப்போவதில்லை, அது வீண் முயற்சி என்று அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நேற்று சென்னையில் நிருபர்களிடம் கூறியதாவது:
அதிமுக கூட்டணிக்கு வாருங்கள் என்று யாரையும் கெஞ்ச வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை, எங்களுக்கான தனித்தன்மை இருக்கு. அதற்கான அடையாளம் இருக்கிறது. அதிமுக தனியாக நின்று கூட சாதனை படைத்திருக்கிறது. 2014, 2016 இரண்டு தேர்தல்களில் தனியாக நின்றோம். அதே நேரத்தில் ஒரு கட்சி கூட்டணிக்கு விரும்பினால் அதை எப்படி வேண்டாம் என்று சொல்ல முடியும்.

எங்கள் கட்சியை பொறுத்தவரை வாங்க வாங்க என்று யாரையும் பத்திரிகை வைத்து அழைக்கவில்லை, அதற்கான அவசியமும் இல்லை. அப்படிப்பட்ட கட்சியும் இல்லை. யாராக இருந்தாலும் சரி அவர்கள் வருவதை கட்சி முடிவு செய்யும். கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம். வரவில்லை என்றால் டோன்ட் கேர். எந்த வண்டி வேகமாக போகிறதோ அந்த வண்டியில் தான் ஏறுவார்கள். தமிழகத்திற்கு மோடி வருகையால் எந்தவித மாற்றமும் தாக்கமும் ஏற்படப்போவதில்லை, அது வீண் முயற்சி. ஏனெனில் இது திராவிட மண். இவ்வாறு அவர் கூறினார்.

The post மோடி வருகையால் தமிழகத்திற்கு எந்த மாற்றமும் ஏற்படப்போவதில்லை: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Former minister ,Jayakumar ,CHENNAI ,AIADMK ,Minister ,AIADMK alliance ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...