×

தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் மோடி புதிய திட்டங்களை கொடுத்து கொண்டு இருக்கிறார்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு

சென்னை: பாஜ பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடிக்கு காஞ்சிபுரத்தில் நெய்யப்பட்ட சால்வையை பாஜ தலைவர் அண்ணாமலை, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் ஆகியோர் அணிவித்தனர். மேலும் சென்னை கோட்ட பொறுப்பாளர்கள் சார்பில் மாநில செயலாளர் வினோஜ் பி.செல்வம் பனை தொழிலாளர்களை அங்கீகரிக்கும் விதமாக பனை தொழிலாளர்களின் உபகரணங்களை பரிசாக அளித்தார்.

தொடர்ந்து ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேசியதாவது:
பிரதமர் மோடி தமிழகத்திற்கு எப்போது எல்லாம் வருகிறாரோ, அப்போது எல்லாம் புதிதாக திட்டங்களை கொடுத்து கொண்டு தான் இருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் கிட்டத்தட்ட 11 லட்சம் கோடி தமிழகத்தின் வளர்ச்சிக்காக, தமிழ்நாட்டின் மேம்பாட்டிற்காக, தமிழ் மண்ணின் வளர்சிக்காக கொடுத்துள்ளார். பிரதமர் மோடி தமிழனை, தமிழ் மொழியை, தமிழ் மக்களை நேசிப்பதில் எந்த அளவுக்கு இருக்கிறார் என்றால், உலகம் முழுவதும் எங்கு சென்றாலும் தமிழர்களின் பாரம்பரியம், தமிழ் மொழியின் பெருமை, தமிழ் தான் இந்த உலகத்தினுடைய தொன்மையான மொழி என்று உலகம் முழுவதும் எடுத்து சென்றவர்.இவ்வாறு அவர் பேசினார்.

அண்ணாமலை: பாஜ பொதுக்கூட்டத்தில் தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை பேசுகையில், ‘‘இந்திய அரசியலை அடிப்படையில் இருந்து மாற்றி இருக்கிறார் பிரதமர் மோடி. ஒரு நேர்மையான அரசியலை இந்திய ஜனநாயகத்தில் கொடுக்க முடியும் என்பதை காட்டி இருக்கிறார். அடுத்த 60 நாட்கள் இந்திய அரசியலில் மிக முக்கியமான நாட்கள். 25 ஆண்டுகளுக்கான திட்டங்களை கையில் வைத்திருக்கிறார். அதற்கான அடித்தளத்தை 2024ல் அமைப்பதற்கு தயாராக இருக்கிறார்’’ என்றார்.

The post தமிழகத்திற்கு வரும் போதெல்லாம் மோடி புதிய திட்டங்களை கொடுத்து கொண்டு இருக்கிறார்: ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Modi ,Tamil Nadu ,Union Minister of State L. Murugan ,Chennai ,BJP ,president ,Annamalai ,Union Minister of State ,L. Murugan ,Kanchipuram ,State Secretary ,Vinoj P. Selvam ,
× RELATED தமிழ்நாடு முழுவதும் பாஜக அலை...