×

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் மனு

 

சூலூர், மார்ச் 5: சூலூர் மோப்பரிபாளையம் பகுதியில் பேரூராட்சிக்கு சொந்தமான மயான பூமியில் 12 சென்ட் அளவிற்குள் புதிதாக மின் மயானம் அமைப்பதற்காக பேரூராட்சி நிர்வாகம் சார்பில் இடம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒதுக்கீடு செய்வதற்கான விண்ணப்பத்தை தமிழக அரசுக்கு பேரூராட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ளது எனவே, இங்குள்ள கொடிசியா வளாகத்தில் உள்ள மின் மயானம் அமைப்பதற்கு இடம் தேர்வு செய்து அதற்கான தீர்மானமும் பேரூராட்சியில் கொடுக்கப்பட்டுள்ளது.

மாவட்ட வருவாய் துறையினர் அந்த பகுதி மின் மயானம் அமைப்பதற்கு ஏற்ற பகுதி இல்லை என கூறி தற்போது பேரூராட்சி அலுவலகம் அருகில் உள்ள 12 சென்ட் நிலத்தில் மின் மயானம் அமைத்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியில் உள்ள நூற்றுக்கும் மேற்பட்ட மக்கள் பேரூராட்சி அலுவலகத்தில் முற்றுகையிட்டு பேரூராட்சி தலைவர் சசிக்குமாரிடம் இந்த முடிவை திரும்ப பெற வேண்டும். மின் மயானம் அமைத்தால் பகுதியில் உள்ள மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். உடனடியாக திட்டத்தை நிறுத்துமாறு மோப்பரிபாளையம் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு கொடுத்தனர்.

The post மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு மக்கள் மனு appeared first on Dinakaran.

Tags : Sulur ,Moparipalayam ,Tamil Nadu government ,
× RELATED தாமரையை தோற்கடிக்கணும்… மனதில் இருப்பதை கொட்டிய டிடிவி