×

கல்பாக்கம் வந்த மோடியை எதிர்த்து கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: 15 பேர் கைது

திருப்போரூர்: கல்பாக்கம் வந்த மோடியை எதிர்த்து கருப்புக்கொடி காட்டி, திருப்போரில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, 15 பேரை போலீசார் கைது செய்ததால் பரபரப்பு நிலவியது. டெல்லியில் நடைபெறும் விவசாயிகள் போராட்டத்திற்கு ஆதரவாகவும், விவசாயி ஒருவரை சுட்டுக் கொன்ற மோடி அரசை கண்டித்தும், சென்னை மற்றும் கல்பாக்கம் வந்த பிரதமர் ேமாடியை கண்டித்தும் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு சார்பில், மாநில பொதுச் செயலாளர் துரைசாமி தலைமையில் திருப்போரூர் ரவுண்டானா அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில், செங்கல்பட்டு மாவட்ட தலைவர் டில்லிராம், மாவட்ட துணை தலைவர் சக்திவேல், திருப்போரூர் ஒன்றிய செயலாளர் தசரதன், திருக்கழுக்குன்றம் ஒன்றிய தலைவர் கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர் சண்முகம், நெரும்பூர் செயலாளர் பாலாஜி மற்றும் நிர்வாகிகள் கலந்துக்கொண்டு மோடியின் வருகையை கண்டித்தும், ஒன்றிய அரசை கண்டித்தும் கருப்புக்கொடி காட்டி கோஷங்கள் எழுப்பினர். திருப்போரூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான போலீசார், அவர்களை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்து மாலையில் விடுவித்தனர்.

The post கல்பாக்கம் வந்த மோடியை எதிர்த்து கருப்புக்கொடி காட்டி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்: 15 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Modi ,Kalpakkam ,Tiruporur ,Tiruppur ,Delhi ,Modi government ,
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து