×

நெரிசலில் சிக்கிய பயணிகள் 15 விமானங்கள் தாமதம்

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, நேற்று சென்னை வந்ததால் கிண்டியில் இருந்து பல்லாவரம் வரை கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசல் காரணமாக வாகனங்களில் சென்னை விமான நிலையம் வந்த பயணிகள் பலர், பாதி வழியில் சிக்கினர். பயணிகள் வர தாமதமானதால், நேற்று மாலை 6 மணியிலிருந்து, இரவு 9.30 மணி வரையில் மொத்தம் 15 விமானங்கள் சுமார் அரை மணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரம் வரை தாமதமாக புறப்பட்டு சென்றன.

சர்வதேச விமானங்களான குவைத், தோகா, மற்றும் உள்நாட்டு விமானங்கள் மும்பை, திருவனந்தபுரம், கவுஹாத்தி, பெங்களூர், கோவை, டெல்லி, கொல்கத்தா உள்ளிட்ட 13 உள்நாட்டு விமானங்களும் தாமதமாக புறப்பட்டு சென்றன. இதனால் விமான பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

The post நெரிசலில் சிக்கிய பயணிகள் 15 விமானங்கள் தாமதம் appeared first on Dinakaran.

Tags : CHENNAI ,Narendra Modi ,Guindy ,Pallavaram ,Chennai airport ,Dinakaran ,
× RELATED பிரதமர் நரேந்திரமோடி வீட்டுக்கும்...