×

அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: மாஜி அமைச்சர்கள் பங்கேற்பு

திருவள்ளூர்: திருவள்ளூரில் ஒருங்கிணைந்த அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருவள்ளூரில் ஒருங்கிணைந்த அதிமுக இளைஞர், இளம் பெண்கள் பாசறை, மகளிர் அணி, மாணவர் அணி சார்பில் போதைப் பொருளை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாவட்டச் செயலாளர்கள் பிவி.ரமணா, பா.பென்ஜமின், வி.மூர்த்தி, எஸ்.அப்துல் ரஹீம், சிறுனியம் பி.பலராமன், வி.அலெக்ஸாண்டர் ஆகியோர் தலைமை தாங்கினர்.

நகர, ஒன்றிய செயலாளர்கள் கந்தசாமி, ரவிச்சந்திரன், குமார், சவுந்தரராஜன், சுதாகர், ராமஞ்சேரி மாதவன், சந்திரசேகர், ரவி, சீனிவாசன், கவுதமன், மகேந்திரன், சக்திவேல், பொதுக்குழு உறுப்பினர்கள் ராஜகோபால், சந்திரசேகர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் எம்பி வேணுகோபால், அமைப்பு செயலாளர்கள் கோ.அரி, பா.சீனிவாசன், முன்னாள் எம்எல்ஏக்கள் மணிமாறன், விஜயகுமார், மாவட்ட நிர்வாகிகள் கண்ணன், திருநாவுக்கரசு, இன்பநாதன், பாஸ்கரன், ஜாவித் அகமத், விஜயலட்சுமி ராமமூர்த்தி ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். மாநில மாணவரணி துணைச் செயலாளர் சல்மான் ஜாவித், மாநில இளைஞர் பாசறை செயலாளர் கிஷோர், ஒன்றியக்குழு தலைவர்கள் சுஜாதா சுதாகர், வெங்கட்ரமணா, ஜீவா விஜயராகவன், வழக்கறிஞர் ராம்குமார், பெருமாள்பட்டு ஊராட்சித் தலைவர் சீனிவாசன், வினோத்குமார் ஜெயின், ராஜி, பாலாஜி, நேசன், ஞானகுமார், எழிலரசன் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு முழக்கங்களை எழுப்பினர்.

The post அதிமுக சார்பில் ஆர்ப்பாட்டம்: மாஜி அமைச்சர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Tags : AIADMK ,Tiruvallur ,
× RELATED அதிமுக தேர்தல் பிரசாரத்தின்போது வாகன...