×

சில்லி பாயின்ட்…

* நியூசிலாந்து வீரர் டெவன் கான்வே இடது கை பெருவிரலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு அறுவைசிகிச்சை செய்துகொள்ள இருப்பதால், 8 வாரங்கள் ஓய்வெடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, 2024 ஐபிஎல் தொடரில் இருந்து அவர் விலகியுள்ளார். கான்வே விலகியுள்ள நிலையில், சிஎஸ்கே அணியின் கேப்டன் தோனி தொடக்க வீரராகக் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

* பிரபல கால்பந்துதொடர்களான யுஇஎப்ஏ சாம்பியன்ஸ் லீக், ஐரோப்பிய கிளப் லீக், ஐரோப்பிய சூப்பர் கோப்பை உள்ளிட்ட கால்பந்து போட்டிகளை மேலும் 3 சீசன்களுக்கு இந்தியாவில் ஒளிபரப்பு செய்வதற்கான உரிமையை சோனி ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க் நீட்டித்துள்ளது. இதன் மூலம் அடுத்த 3 ஆண்டுகளில் 1600க்கும் அதிகமான கால்பந்து ஆட்டங்களை சோனி டிவி ஒளிபரப்புச் செய்யும்.

* மலேசிய செஸ் கூட்டமைப்பு சார்பில் நடந்த காமன்வெல்த் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்ற ஷர்வானிகா (8) தங்கப்பதக்கத்தையும், ராகவ் (14) வெள்ளிப்பதக்கத்தையும் வென்றனர். இவர்கள் இருவரும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

* தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் (எஸ்டிஏடி) 46வது செயற்குழு கூட்டம், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் சென்னையில் நேற்று நடைபெற்றது.

The post சில்லி பாயின்ட்… appeared first on Dinakaran.

Tags : Devon Conway ,2024 IPL series ,Conway ,Dinakaran ,
× RELATED காயம் காரணமாக ஐபிஎல் தொடரிலிருந்து...