×

ஆதித்யா எல் 1 ஏவப்பட்ட அன்று எனக்கு புற்று நோய் கண்டறியப்பட்டது: இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல்

திருவனந்தபுரம்: இந்திய விண்வெளி ஆய்வு நிறுவன தலைவர் சோமநாத் அளித்த பேட்டி : சந்திரயான் 3 செயற்கைக்கோள் ஏவும் பணிகளுக்கிடையே எனக்கு சில உடல் நலக்குறைவுகள் ஏற்பட்டன. அப்போது உடலுக்கு என்ன பிரச்னை என்பதை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் கடந்த ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி ஏவப்பட்டது.

அதே நாளில்தான் எனக்கு புற்றுநோய் பாதித்திருந்தது உறுதி செய்யப்பட்டது. இது என்னுடைய குடும்பத்தினருக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக சென்னையில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு சென்று பரிசோதனைகளை நடத்தினேன். இதில் வயிற்றில் புற்றுநோய் பாதித்திருந்தது தெரியவந்தது. உடனடியாக டாக்டர்கள் சிகிச்சை தொடங்கினர்.

கீமோதெராபியும் பின்னர் அறுவை சிகிச்சையும் நடத்தப்பட்டது.4 நாட்கள் மருத்துவமனையில் இருந்தேன். 5வது நாள் உடலில் ஒரு பிரச்னையும் இல்லாததால் மீண்டும் பணிக்கு வந்துவிட்டேன். இப்போது நோயிலிருந்து முழுமையாக மீண்டு விட்டேன். ஆனாலும் தொடர் பரிசோதனைகளை நடத்தி வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

The post ஆதித்யா எல் 1 ஏவப்பட்ட அன்று எனக்கு புற்று நோய் கண்டறியப்பட்டது: இஸ்ரோ தலைவர் சோமநாத் தகவல் appeared first on Dinakaran.

Tags : ISRO ,Somanath ,Thiruvananthapuram ,Indian Space Research Organization ,
× RELATED தமிழ்நாட்டில் முதல் முறையாக ரோஜாவனம்...