×

இலங்கையில் சுற்றுலா துறை 122 சதவீதம் வளர்ச்சி: அமைச்சர்

கொழும்பு: இலங்கையில் சுற்றுலா துறை கடந்தாண்டு ஜனவரியுடன் ஒப்பிடுகையில் நடப்பாண்டு ஜனவரியில் 122 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ளதாக நிதி துறை இணையமைச்சர் ரஞ்சித் சியம்பலபிட்டிய தெரிவித்தார். இதுகுறித்து அவர் நேற்று, தனது தொகுதியான ருவன்வெல்லாவில் நிருபர்களிடம் கூறியதாவது: இலங்கை சுற்றுலா துறை 342 மில்லியன் டாலர் வருவாயை ஈட்டியுள்ளது. இதனடிப்படையில் சுற்றுலா துறை 122 சதவீத அளவுக்கு வளர்ச்சியடைந்திருப்பது தெரியவந்துள்ளது. பொருளாதார நெருக்கடி காலத்தில் இலங்கை ரூபாய் மதிப்பு சரிந்திருந்தது. நிகழாண்டு ஜனவரியில் ரூபாய் மதிப்பு 14.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு கடந்தாண்டு ஜனவரியில் 2.1 பில்லியன் டாலராக இருந்த நிலையில், நிகழாண்டு ஜனவரியில் 114 சதவீதம் அதிகரித்து 4.5 பில்லியன் டாலராக உள்ளது. நாட்டின் பொருளாதாரமும் 2023ம் நிதியாண்டின் 3வது காலாண்டில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக, 2022ம் நிதியாண்டின் 2வது காலாண்டில் திவால் நிலையை அறிவித்தது அரசு. அதன்பிறகு சர்வதேச நிதியத்தின் (ஐஎம்எஃப்) கடனுதவியுடன் பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை படிப்படியாக மீண்டு வருகிறது. இதனால் அந்நாட்டு மக்கள் சற்று நிம்மதியடைந்து வருகின்றனர்.

The post இலங்கையில் சுற்றுலா துறை 122 சதவீதம் வளர்ச்சி: அமைச்சர் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka ,Minister Colombo ,Minister of State for Finance ,Ranjith Siambalapitiya ,Ruwanwella ,
× RELATED இலங்கையில் கார் பந்தயத்தின் போது...