×

பைக்கில் சென்றபோது சுற்றிவளைத்து டாஸ்மாக் சூபர்வைசருக்கு வெட்டு: நெற்குன்றத்தில் அதிகாலை சம்பவம்

அண்ணாநகர்: நெற்குன்றம் பகுதியில் பைக்கில் சென்ற டாஸ்மாக் சூபர்வைசரை மறித்து சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.சென்னை நெற்குன்றம் சக்திநகர் பகுதியை சேர்ந்தவர் ரமேஷ்(45). இவர் மாதவரம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடையில் சூபர்வைசராக உள்ளார். வேலை முடிந்ததும் இன்று அதிகாலை பைக்கில் மாதவரத்தில் இருந்து கிளம்பினார்.

நெற்குன்றம் வெங்காய மண்டி பேருந்து நிலைய பகுதியில் வந்தபோது பின்னால் பைக்கில்வந்த 2 பேர், ரமேஷை சுற்றிவளைத்தனர். பின்னர் அவர்கள் தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து சரமாரியாக வெட்டினர். அவர்களிடம் இருந்து தப்பிக்க முயன்றபோதும் விரட்டிச்சென்று ரமேஷை சரமாரி வெட்டிவிட்டு பைக்கில் தப்பினர்.

இதையடுத்து பொதுமக்கள் ஓடிவந்து படுகாயத்துடன் கிடந்த ரமேஷை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுபற்றி அறிந்ததும் கோயம்பேடு போலீசார் வந்து விசாரித்தனர். அப்போது ரமேஷ் கூறுகையில், ‘’ இன்று அதிகாலையில் அடையாளம் தெரியாத 2 பேர் பைக்கில் என்னை பின்தொடர்ந்து வருவதை கண்டு பயந்து எனது பைக்கில் வேகமாக சென்றேன்.

ஆனால் அதற்குள் மர்மநபர்கள் என்னை சுற்றிவளைத்து நடுரோட்டில் வைத்து வெட்டினர்’ என்று தெரிவித்துள்ளார். இன்ஸ்பெக்டர் பரணிதரன் தலைமையில் போலீசார் வழக்குபதிவு செய்து தனிப்படை அமைத்து ரமேஷை வெட்டிய நபர்களை பற்றி விசாரிக்கின்றனர். வழிப்பறி செய்வதற்காக வந்தார்களா, முன் விரோதம் காரணமாக கொலை செய்ய முயன்றார்களா என்று விசாரணை நடத்துகின்றனர்.

The post பைக்கில் சென்றபோது சுற்றிவளைத்து டாஸ்மாக் சூபர்வைசருக்கு வெட்டு: நெற்குன்றத்தில் அதிகாலை சம்பவம் appeared first on Dinakaran.

Tags : TASMAC SUPERVISOR ,Nekkunram ,Annanagar ,Tasmac ,Nelkurunram ,Madhavaram ,Nelkunram ,Dinakaran ,
× RELATED குழந்தை குடித்த பாலில் பல்லி பிரபல...