×

புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன், தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன்: சோம்நாத்

பெங்களூர்: புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன், தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன் என இஸ்ரோ இயக்குநர் சோம்நாத் தெரிவித்துள்ளார். ஆதித்யா எல் 1 செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்பட்ட அதே நாளில் இஸ்ரோ இயக்குநர் சோம்நாத்துக்கு புற்றுநோய் கண்டறியப்பட்டது. சந்திரயான் -3 செயற்கைக்கோள் செலுத்தப்பட்ட அந்தநாளில் உடலில் சில பிரச்சினைகள் இருந்ததை உணர்ந்தேன். கடந்த ஆண்டு செப்டம்பர். 2ம் தேதி எனக்கு புற்றுநோய் இருப்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. தற்போது மீண்டு வந்துள்ளேன் என்றும் அவர் தெரிவித்தார்.

The post புற்றுநோயில் இருந்து மீண்டு வந்துள்ளேன், தொடர்ந்து சிகிச்சை பெறுகிறேன்: சோம்நாத் appeared first on Dinakaran.

Tags : Somnath ,Bangalore ,ISRO ,L1 ,
× RELATED பெங்களூரு வணிக வளாகத்தில் தீ விபத்து:...