×

அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் சிக்கல்!: ஒரே தொகுதிகளை கேட்கும் தேமுதிக, பாமக?

சென்னை: அதிமுக கூட்டணியில் ஒரே தொகுதிகளை தேமுதிக, பாமக கேட்பதால் சிக்கல் தொடர்கிறது. அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதிகளை முடிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது. தேமுதிக போட்டியிட பட்டியலிட்ட தொகுதிகளில் பாமகவும் போட்டியிட விருப்பம் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுக கூட்டணியில் 7 மக்களவைத் தொகுதிகளும், 1 மாநிலங்களவை பதவியும் தேமுதிக கேட்கிறது. தேமுதிகவுக்கு 4 தொகுதிகள் வரை ஒதுக்க அதிமுக சம்மதம் தெரிவித்திருப்பதாக கூறப்படுகிறது. விரும்பிய தொகுதிகளை ஒதுக்கீடு செய்தால் மட்டுமே அதிமுக கூட்டணியில் இணைவோம் என தேமுதிக உறுதியாக நிற்கிறது.

விழுப்புரம், கள்ளக்குறிச்சி, விருதுநகர், கடலூர் என 4 தொகுதியையும், 1 மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் தேமுதிக கேட்கிறது. இருப்பினும் மாநிலங்களவை உறுப்பினர் பதவியை வழங்க அதிமுக திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது. எனவே மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பதிலாக, மதுரை தொகுதியை கூடுதலாக ஒதுக்க தேமுதிக தலைமை வலியுறுத்தியுள்ளது.

இதேபோல், தேமுதிக பட்டியலிட்ட தொகுதிகளில் விழுப்புரம், கடலூர் என சில தொகுதிகளில் போட்டியிட பாமகவும் விருப்பம் தெரிவித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒரே தொகுதிகளை இரு கட்சிகளும் கேட்பதால், கூட்டணியை இறுதி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. பாமக சார்பில் 10 தொகுதிகள், 1 மாநிலங்களவை பதவி கேட்கப்பட்ட நிலையில் 7 தொகுதிகள் ஒதுக்க அதிமுக முடிவு செய்துள்ளது.

The post அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தையில் தொகுதிகளை முடிவு செய்வதில் நீடிக்கும் சிக்கல்!: ஒரே தொகுதிகளை கேட்கும் தேமுதிக, பாமக? appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BAM ,CHENNAI ,DMK ,AIADMK alliance ,Bhamaka ,DMD ,BAMAK ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங்கின் ஆதரவாளரான பிரபல...